ரஷ்யாவின் மிர் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள கியூபா !!
மிர் கட்டண முறையை கியூபா உட்பட, 9 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரஷ்யாவின் தேசிய அட்டை செலுத்தும் அமைப்பின் செயலாளர் விளாடிமிர் கோம்லேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரின் எதிரொலியாக ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வந்தன.
இந்நிலையில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட மாஸ்டர்கார்ட் மற்றும் விசா கார்ட்களின் செயல்பாடுகள் செயலிழந்து போனது.
அத்துடன், ஏனைய நாடுகளுடன் வர்த்தக தொர்புகளில் ஈடுபட முடியாமையினால், ரஷ்ய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனை கருத்திற்கொண்டு, ரஷ்யா பொருளாதார தடைகளை விதிக்காத நட்பு நாடுகளை தன்னோடு இணைத்து செயற்பட விரும்பிய நிலையில், அந்நாட்டு மத்திய வங்கி மிர் கட்டண முறைமையினை அறிமுகம் செய்துள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டே ரஷ்யா ஏனைய நாடுகளுடன் பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.