சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறி!!
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒரு வருட காலக் கற்கை நெறிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 28 ஆம் திகதி ஆகும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் சித்தியடைந்த அல்லது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்து ஒரு வருடகால துறைசார் அனுபவமுடைய யாவரும் இக்கற்றை நெறிக்காக விண்ணப்பிக்கமுடியும் என்றும், விண்ணப்பிக்க விரும்புவபவர்கள் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் சி.சிவேசன் அறிவித்துள்ளார்.