தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 92 பேருக்கு கொரோனா பாதிப்பு !!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 36 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 671 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 149 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 987 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 58 குறைந்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி 1,786 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. கேரளாவில் விடுபட்ட ஒரு மரணம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது.