மணிப்பூரில் வருகிற 24-ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏற்பாடு!!
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பும் அங்கும் வன்முறை ஓயவில்லை.
இதையடுத்து வருகிற 24-ந் தேதி அங்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மணிப்பூர் மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.