வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து: தொழில்அதிபர்கள் பங்கேற்பு !!
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகை சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். Powered By VDO.AI பின்னர், இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். அதன்பின் பிரதமர் மோடிக்கு விருந்து வைத்தனர். அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை (நேற்று) வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடி, ஜோ பைடன் உடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதன்பின், பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினர். அதன்பின் ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து அளித்தனர். இதில் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். ஜோ பைடன் பேத்தி தனது கணவருடன் கலந்து கொண்டார். முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.