;
Athirady Tamil News

இந்தியா முன்னேறும்போது மொத்த உலக நாடுகளும் முன்னேறுகின்றன- அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!!

0

அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து சென்றார். இதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிசும் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியின்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. பின்னர், வெள்ளை மாளிகை வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்கவாழ் இந்தியர்களால் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றார். மேலும், அமெரிக்கவாழ் இந்தியர்கள், அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவுக்கு பாலமாக திகழ்வதாகவும் கூறினார். இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையா கருதுகிறேன். வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைகிறோம். இந்தயா மிகப்பெரிய ஜனநாயக நாடு. சமத்துவம், கண்ணியத்தை ஜனநாயகம் அங்கீகரிக்கிறது. ஜனநாயகம் இருநாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது. ஜனநாயகம், பன்முகத்தன்மையை ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்துள்ளார்கள். உலகில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா விரைவில் 3வது இடத்திற்கு முன்னேறும். உள்கட்டமைப்பில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா வளர்ந்தால் ஒட்டுமொத்த உலகமும் வளரும். நவீன இந்தியாவில் பெண்களால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். பழங்குடியினத்தில் இருந்து வந்த பெண்தான் இந்தியாவின் குடியரசுத் தலைவர். இந்திய ராணுவத்தில் பெண்கள் முக்கிய பதவிகளை அலங்கரிக்கின்றனர். சர்வதேச அளவில் அதிக பெண் விமானிகளை இந்தியா கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் கலாசாரம் சுற்றுச்சூழலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உலகம் என்பது ஒரே குடும்பம். அதில் ஒவ்வொருவரும் பயனடைய வேண்டும். உலக நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடின. ராணுவ ஒத்துழைப்பில் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரும் நாடு. ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கோடு உலக நாடுகள் செயல்பட வேண்டும். அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவில் புதிய அத்தியாயத்திற்கான கதவுகள் திறந்துள்ளன. பருவநிலை மாற்றம், பட்டினி, நோயை போக்க இருநாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். உக்ரைன்- ரஷியா போரிடுவதற்கான காலகட்டம் இதுவல்ல. இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான செயல்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

உலகம் மாறிவிட்டது, அதற்கேற்ப நமக்குள்ளும் மாற்றம் வர வேண்டும். உலகளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை கொரோனா காலகட்டம் நமக்கு உணர்த்தியது. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுவது இது 2-வது முறை. மோடி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக உரையாற்றினார். அதன்பின் தற்போது 2-வது முறையாக அவர் அமெரிக்காவில உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.