சமூக நீதியின் பூமியில் இருந்து போர் முழக்கம் எழுவதில் ஆச்சரியமில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்!!
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார சென்றுள்ளார். அப்போது, பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இந்நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் பாட்னா வந்தடைந்தேன், மாண்புமிகு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் தமிழ் சங்கத்தின் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்றேன். ‘ஆசியாவின் ஒளி’ புத்தர், ‘ஜன்நாயக்’ கர்பூரி தாக்கூர் மற்றும் திரு பி.பி. மண்டல் போன்றோரை நமக்கு வழங்கிய மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை” என்று பதிவிட்டுள்ளர். தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், “மூத்த தலைவர் லாலுபிரசாத்யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தலைவர் கலைஞர் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார். அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளை வாழ்த்தினேன். நாளை (இன்று) வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு தயாராகி வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.