;
Athirady Tamil News

அதிகபட்ச விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்!!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தீர்மானங்களினால் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சேமிக்க முடிந்ததாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையான நுகர்வோர் அதிகார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வரிச்சலுகைகளைப் பெற்று மக்களுக்கு நிவாரணம் வழங்காத அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் அதிகபட்ச விலையையும் காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும், அவ்வாறு செய்யாத நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் நேற்று (22) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.