மலையக மக்களின் 200 ஆண்டுகள் நிறைவையோட்டி யாழில் கண்காட்சி!! (PHOTOS)
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கண்காட்சி இன்று (23) ஆரம்பமானது.
மலையக மக்களின் வாழ்வியல் சவால்களை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலைவெளிப்பாடுகளாக “புறக்கணிக்கப்பட்ட மலைகள்” என்ற தலைப்பில் கிசோகுமாரின் புகைப்பட கண்காட்சியும், “தேயிலை சாயம்”, எனும் தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் புகைப்படங்களின் கண்காட்சியும் இதில் உள்ளடக்கியுள்ளது.
குறித்த கண்காட்சி நாளை மறுதினம்(25) வரை, யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.