உக்ரைன் – ரஷ்ய யுத்தம் இப்படித்தான் முடியும் – கனடா எதிர்வுகூறல் !!
உக்ரைன் – ரஷ்ய யுத்தம் தொடங்கி ஒரு வருடம் கடந்தும் முடிவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், இந்த யுத்தமானது இறுதியில் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், மீளவும் முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் தொடர்ச்சியாக கனடா உதவி செய்ய வேண்டி வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
“உக்ரைனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடா உள்ளிட்ட நேட்டோ கூட்டுப் படைகள் உதவி வழங்க வேண்டும்.
உலகின் ஏனைய யுத்தங்களை போலவே இந்த யுத்தமும் சமாதான பேச்சுவார்த்தைகளின் ஊடாக முடிவுக்கு வரலாம் என நம்பிக்கை உள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெறும் பொழுது உக்ரைன் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.