சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!!
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலால் அவதிப்பட்டு மக்கள் சற்று ஆறுதல் அடைந்து வருகின்றனர். இருப்பினும் நேற்று காலையில் வெயில் தலைகாட்டிய நிலையில் இன்று நள்ளிரவில் சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிழ மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மயிலாப்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, எழும்பூர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், அம்பத்தூர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.