உலகின் தலைவிதியை மாற்றப்போகும் இந்திய -அமெரிக்க உறவு !!
அமெரிக்கா- இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் நம்பிக்கை வாய்ந்தது என்றும், இந்த உறவு உலகின் தலைவிதியை மாற்றும் என்றும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கு சென்றுள்ள மோடி, ஜோன் எஃப் கென்னடி மையத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் தீவிர வறுமை ஒழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் 16 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும், இந்தியா உள்கட்டமைப்பில் 125 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, முழு உலகத்திற்கும் முக்கியமானது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.