;
Athirady Tamil News

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது – புடினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வாக்னர் குழு !!

0

இன்று ரஷ்ய அதிபர் புடினுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய வாக்னர் குழுவின் பின்புலம் என்ன? புடின் வளர்த்த கடா மார்பில் பாயும் நிலைக்கு சென்றதற்கான காரணம் தான் என்ன?

இதற்கு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் ரஷ்ய இராணுவத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது படைப்பிரிவு மீது ரஷ்ய இாணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நடத்தி சுமார் 2000 பேரை கொன்று விட்டதாக குற்றம் சுமத்துகிறார்.

சரி வாக்னர் குழுவின் பின்புலம் அது உருவான கதையை பார்க்கலாம்.

ரஷ்ய அதிபர் புடினுக்கு புதிய நெருக்கடி தரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் ஒரு தசாப்தத்துக்கும் குறைவானதாகத் தான் இருக்கிறது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் இராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம்.

ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது.

மறைமுகமாக அதிபர் புடினின் ஆதரவோடு, இராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது.

டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் ப்ரிகோஸின் என்ற புடினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர்.

இதில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. ஏன் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட ‘ வாக்னர்’ குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு.

2015-ல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

அல்கொய்தா போன்ற ஆயுதக் குழுக்கள் வளர்த்துவிட்டவர்களுக்கே நெருக்கடியான கதையே இந்த உலக வரலாற்றில் உள்ளது. அப்படித்தான் இந்த வாக்னர் ஆயுதக் குழுவும் இன்று புடினுக்கு புதிய நெருக்கடியாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.