கொடிகாமத்தில் விபத்து – 09 பேர் காயம்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 09 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கி காயமடைந்த 09 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்து!! (PHOTOS)