பொலிஸ்மா அதிபருக்கு மீண்டும் சேவை நீடிப்பு !!
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது முறையாகவும் சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது சேவைக்காலம் இன்றுடன் (26) முடிவடைகிறது.
புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கு இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.
அத்துடன் அரசியலமைப்பு சபை இன்றும் நாளையும் கூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் விரைவாக மேற்கொள்ளப்பட மாட்டாது.
இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கையில், புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி வருகையின் பின்னர் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்தார், ஆனால் அரசாங்கம் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.