டெங்கு தாக்கம் அதிகரிக்கும் !!
எதிர்வரும் பருவமழை காலப்பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டெங்குவை அரசாங்கத்தினாலும் சுகாதாரத்துறையால் மாத்திரம் தனித்தியங்கி அழிக்க முடியாது. அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமென அவர் மேலும் தெரிவித்தார்.