அமெரிக்காவில் கடத்தி செல்வதாக நினைத்து கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட பெண்!!
அமெரிக்காவின் கென்டக்கியை சேர்ந்தவர் 48 வயதான பெண் கோபாஸ். இவர் டெக்சாசில் உள்ள தனது காதலனை பார்க்க சென்றார். அங்கு ஓரு சூதாட்ட விடுதியில் காதலன் இருந்தார். இதனால் உபெர் வாடகை காரை கோபாஸ் புக் செய்து பயணம் செய்தார். அப்போது ஜுவாரெஸ் மெக்சிகோவுக்கான நெடுஞ்சாலை பலகையை பார்த்து விட்டு தன்னை டிரைவர் மெக்சிகோவுக்கு கடத்தி செல்வதாக நினைத்தார். இதனால் தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தன்னை கடத்தி செல்வதாக கோபாஸ் தவறாக நினைத்து டிரைவரை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது. அவர் மீது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டேனியலின் மனைவி கூறும்போது, தனது கணவர் உபெர் செயலியில் காட்டிய வழியைதான் பின் தொடர்ந்தார் என்றார்.