புதிதாக 80 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று உயர்வு!!
இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று பாதிப்பு நேற்று 55 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 63 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 379 பேர் மீண்டுள்ளனர்.
தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 17 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,670 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஆக நீடிக்கிறது.