கட்டளையாணைக்கு எதிராக ரிட் கட்டளை!!
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்கொண்டுச் செல்லும் கட்டளையாணையை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளையை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த 2 கோடி ரூபாயை பணத்தை கண்டறிந்தமை விவகாரத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்தார்.
அதற்கெதிராக தேசபந்து தென்னக்கோன் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான தீர்ப்பை வாசித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் அடங்கிய நீதியரசர்கள் குழாம், இந்தக் கட்டளையை பிறப்பித்தது.