கோழிக்கும் முட்டைக்கும் வருட இறுதியில் தீர்வு!!
இந்த வருட இறுதியில், மீண்டும் வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது எனவும் கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டை தொடர்பாக நாட்டில் நிலவும் பிரச்சினைகளும் முற்று முழுதாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட்டு விடும் எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
திஸ்ஸமகராமயில் கடந்த சனிக்கிழமை (24) நடைபெற்ற கால்நடை மருத்துவமனை திட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.