ஹஜ் புனித யாத்திரை: மெக்காவில் விடிய விடிய தொழுகை நடத்திய முஸ்லிம்கள்!!
முஸ்லிம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த நாளில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மெக்கா செல்லும் அவர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்கி இருப்பார்கள். இந்த ஆண்டுக்கான பக்ரீத் வழிபாடுகள் மெக்காவில் இன்று தொடங்கியது. இதற்காக நேற்றே அங்கு சென்ற முஸ்லீம்கள், அங்குள்ள மினா சதுக்கத்தில் உள்ள மசூதியில் விடிய விடிய தொழுகையில் ஈடுபட்டனர்.
நாளை அங்கு நடக்கும் அரபா சங்கமத்தில் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டு இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து சுமார் 18 லட்சம் முஸ்லீம்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.