இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டல்- வாலிபரை கடத்த முயன்றதாக வழக்கு பதிவு!!
தெலுங்கானா மாநிலம், மெடிப்பள்ளியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த போது தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் இளம்பெண்ணிற்கு நிதி உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில் அவினாசுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் இளம்பெண் அவினாசுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனால் அவினாஷ் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் பாஜக பிரமுகர் ஒருவரிடம் அவினாஷ் வீடியோவை வைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.
அரசியல் பிரமுகர் அவினாசுக்கு போன் செய்து தனியாக சந்தித்து பேச வேண்டும் என வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தார். அப்போது இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை செல்போனில் இருந்து அழிக்க வேண்டும் என அவினாஷை வற்புறுத்தினார்.
அவினாஷ் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த சிலருடன் சேர்ந்து அரசியல் பிரமுகர் அவினாஷை தாக்கினார். மேலும் அவினாஷை தன்னுடைய காரில் கடத்த முயன்றார். இதிலிருந்து தப்பிச் சென்ற அவினாஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அவினாஷை கடத்த முயன்றதாக அரசியல் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.