இந்தியா பேசுவதை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது: ராஜ்நாத் சிங் பெருமிதம்!!
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- முன்பெல்லாம் சர்வதேச அமைப்புகளில் இந்தியா ஏதாவது சொன்னால், அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.
ஆனால், 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனவுடன் நிலைமை மாறிவிட்டது. இப்போது, சர்வதேச அமைப்புகளில் இந்தியா பேசுவதை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையால் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவமும், அந்தஸ்தும் உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அப்படி இல்லை. வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் மரியாதை அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டின் பிரதமர், மோடியை ‘பாஸ்’ என்று சொல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடியிடம் ‘ஆட்டோகிராப்’ கேட்கும் அளவுக்கு அவர் அவ்வளவு பிரபலமானவர் என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.