குருதிக் கொடையாளிகளுக்கு யாழில் கௌரவிப்பு!! (PHOTOS)
குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
100 குருதிக் கொடையாளர்களுக்கும் 50 குருதி கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் இதன்போது கௌரவமளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் தாதியியல் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை(27) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை அதிகாரிகள், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள், தேசிய குருதிமாற்று பிரயோக சேவையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடையாளருக்கு கெளரவம் வழங்கினர்.
உலக குருதி கொடையாளர் தினம் ஜுன் 14 ம் திகதி உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.