இரத்த தானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்!!
வடபகுதியில் உள்ள மக்களிடம் இரத்ததானம் தொடர்பிலான விழிப்புணர்வு குறைவாக காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்
யாழ்ப்பாண தாதிய பயிற்சி கல்லூரியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தானங்களிலே சிறந்த தானம் இரத்த தானம். உடல் பாகங்களை தானம் செய்வது, கண் தானம் செய்வது போன்ற பல்வேறு தானங்கள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது,
இரத்த தானம் வழங்குவதில் தற்பொழுது முழுமையாக நாங்கள் வளர்ச்சி பெறாவிட்டாலும் முன்னேற்றம் உள்ளது. என்பது பலராலும் உணரப்பட்ட ஒரு விடயமாக காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் அதை முன்வந்து தானம் செய்ய வேண்டும் என்ற அந்த விழிப்புணர்வு எங்களைப் பொறுத்தவரை குறைவாக இருப்பது எல்லா இடங்களிலும் சுட்டிக்காட்டப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.
இப்பொழுது பலர் அதற்கு ஆக்கமும் ஊக்கமளித்து தாங்களாக முன் வந்து இரத்த தானத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு செயற்படும் நபர்களுக்கு நாங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்