;
Athirady Tamil News

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார்? !!

0

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பு நீண்டுகொண்டே செல்கிறது.

தலைமைத் தளபதியாக, படையெடுப்புக்கான இறுதிப் பொறுப்பு புதினிடமே உள்ளது. ஆனால், அவர் தனக்கென ஒரு சிறிய வட்டத்தைச் சார்ந்திருக்கிறார். அவர்களில் பலர் ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கான சேவைகளில் தங்களது தொழில்முறை வாழ்வைத் தொடங்கியவர்கள்.

வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், ஒரு காலத்தில் புதினின் நெருங்கிய, சக்திவாய்ந்த கூட்டாளியாக இருந்தார். ஆனால், அவர் செய்த கிளர்ச்சியின் காரணமாகத் தற்போது அந்த நெருங்கிய வட்டத்தில் அவர் இல்லை. இப்போதைய நிலவரத்தில், போரின் இந்தத் தீர்க்கமான தருணத்தில் புதின் யார் சொல்வதைக் கேட்பார்?

பல மாதங்களாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு, ராணுவத் தலைவர் வேலரி கெராசிமோவ் ஆகியோர் ப்ரிகோஜினுடன் மோதிக்கொண்டே இருந்தனர்.

யுக்ரேனில் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறந்ததற்கு இவர்கள் இருவரும்தான் பொறுப்பு என்று ப்ரிகோஜின் குற்றம் சாட்டினார்.

அதிபருக்கு நெருக்கமாக யாராவது இருந்தால், அது அவரது பாதுகாப்புத்துறை அமைச்சர்தான். நீண்டகால நம்பிக்கைக்கு உரித்தானவர், கடந்த காலத்தில் அவருடன் சைபீரியாவிற்கு வேட்டையாடுதல் மீன்பிடித்தல் போன்ற பயணங்களுக்கு சென்றவர். ஒரு காலத்தில் புதினின் அரசியல் வாரிசு ஆவதற்கான சாத்தியக்கூறு இவருக்கு உண்டு என்றும் கருதப்பட்டது.

முதலில் ரஷ்யா யுக்ரேனை ராணுவமயமாக்குகிறது என்றும் பிறகு ‘மேற்கு’ நாடுகள்தான் போரைத் தொடக்கியது, ரஷ்யா இல்லை என்றும் புதின் கூறியதையே பின்பற்றினார்.

சில நேரங்களில், அதிபர் புதின் எந்த அளவுக்கு இவர் சொல்வதைக் கேட்பார் என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

ரஷ்யாவின் ராணுவ பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. அது எதிர்பாராத அளவுக்கு யுக்ரேனிடம் இருந்து வந்த எதிர்ப்பு, ராணுவத்தின் குறைந்த மன உறுதி ஆகியவற்றுடன் போராடிக் கொண்டிருந்தது.

“ஷோய்குதான் கீயவுக்கு அணிவகுத்துச் செல்ல வேண்டியிருந்தது; பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் வெற்றியைக் கொடுத்தாக வேண்டியிருந்தது,” என்று ஆயுத மோதலில் நிபுணரான வேரா மிரோனோவா கூறினார்.

இன்னும் அவர் போரில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இருப்பினும், யுக்ரேனில் களத்திலுள்ள உண்மை குறித்து அவர் அதிபர் புதினிடம் பொய்யான தகவலைக் கூறியதாக ப்ரிகோஜின் குற்றம் சாட்டினார்.

வலேரி 2014இல் கிரைமியாவை ராணுவம் கைப்பற்றியதன் பெருமையைப் பெற்றார். ரஷ்ய ராணுவத்தின் புலனாய்வு அமைப்பான க்ருவின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார்.

பிரிட்டனில் உள்ள சால்ஸ்பரியில் 2018ஆம் ஆண்டில் நடந்த வேதிமத் தாக்குதல், 2020ஆம் ஆண்டு சைபீரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லனி மீதான வேதிமத் தாக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர்மீது உள்ளன.

மேலும், ரஷ்ய பாதுகாப்பு வல்லுநரும் எழுத்தாளருமான ஆண்ட்ரி சோல்டடோவ், அதிபர் காதுகொடுத்துக் கேட்கும் மிகுந்த செல்வாக்கு மிக்க குரலாக பாதுகாப்பு அமைச்சரே இருப்பதாகப் தெரிவித்துள்ளார்.

“ஷோய்கு, ராணுவத்தின் பொறுப்பாளர் மட்டுமல்ல. அவர் ஓரளவுக்கு சித்தாந்ததிற்கான பொறுப்பாளராகவும் இருக்கிறார். ரஷ்யாவில் சித்தாந்தம் என்பது பெரும்பாலும் வரலாற்றைப் பற்றியது. ஷோய்கு அதை வடிவமைப்பவராக இருக்கிறார்.”

முப்படைத் தளபதி என்ற முறையில், யுக்ரேனை ஆக்கிரமிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவருடைய வேலை. ஆகவே, புதினின் நெருங்கிய வட்டத்தில் அவர் மிகவும் தேவையானவராக காணப்படுகிறார்.

ஆனால், சோவியத் காலகட்டத்திலிருந்து மிக நீண்ட காலம் பதவியில் இருந்த முப்படைத் தளபதியாக அவர் இருப்பதற்கு இன்னொரு காரணம் உள்ளது. விளாதிமிர் புதினுக்கு அவர்மீது நம்பிக்கை உள்ளதுதான் அந்தக் காரணம்.

1999 செச்சென் போரில் ராணுவத்தை வழிநடத்தியதில் இருந்தது, ரஷ்ய ராணுவ பிரசாரங்களில் முக்கியப் பங்கு வகித்தது, பெலாரூஸில் போருக்கு முந்தைய ராணுவப் பயிற்சிகளை மேற்பார்வையிட்டு யுக்ரேன் படையெடுப்புக்கான ராணுவ திட்டமிடலில் முன்னணியில் இருந்தது ஆகியவற்றில் வலேரி பெரும் பங்கு வகித்துள்ளார்.

ரஷ்ய நிபுணர் மார்க் கெலியோட்டி, “சிரிக்காத, கரடுமுரடான, சண்டையை விரும்பக்கூடிய” நபர் என்று ஜெனரல் கெராசிமோவ் குறித்து விவரிக்கிறார். ஜெனரல் கெராசிமோவ் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ராணுவ பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

யுக்ரேன் மீதான படையெடுப்பின் மோசமான நிலை, துருப்புகள் மத்தியில் மன உறுதி குறைந்து வருவது ஆகியவை குறித்த செய்திகள் காரணமாக அவர் ஓரங்கட்டப்பட்டதாக ஆரம்பத்தில் பேசப்பட்டது.

அவர் மே 2022இல் வருடாந்திர மாஸ்கோ ராணுவ அணிவகுப்பில் தோன்றவில்லை. இருந்தும் கடந்த ஜனவரியில் அவர் யுக்ரேனில் ரஷ்ய படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்பு, இப்போது அவரது துணைத் தலைவராக இருக்கும் ஜெனரல் செர்கேய் சுரோவிகின் தளபதியாக இருந்தார்.

“ஒவ்வொரு சாலையையும் ஒவ்வொரு படையணியையும் புதினால் கட்டுப்படுத்த முடியாது. அதைச் செய்வதுதான் இவருடைய வேலை,” என்று ஆண்ட்ரி சோல்டடோவ் கூறினார்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ரஷ்ய அரசியல் தொடர்பான இணை பேராசிரியராக இருக்கும் பென் நோபல், “பட்ருஷேவ் அமைதியான தீர்வுகளை ஆலோசித்து முடிவெடுப்பதைவிட, வலிமையைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தக்கூடியவர். பல ஆண்டுகளாக மேற்கு நாடுகள் ரஷ்யாவை கைப்பற்றத் துடிக்கின்றன என்று நினைக்கக்கூடியவர்,” என்று கூறுகிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் லெனின்கிராட் என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே, 1970களில் புதினுடன் பணியாற்றிய மூன்று விசுவாசிகளில் இவரும் ஒருவர்.
நிகோலாய் பட்ருஷேவ், பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர்

பாதுகாப்பு சேவை பிரிவின் தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ், வெளிநாட்டு உளவுத்துறையின் தலைவர் செர்கேய் நரிஷ்கின் ஆகியோர் புதினுடன் அப்போதிலிருந்து இருக்கும் மற்ற இரண்டு உறுதியான விசுவாசிகள்.

அதிபரின் இந்த நெருங்கிய வட்டம் மொத்தமும் சேர்த்து சிலோவிக்கி என்று அழைக்கப்படுகிறது. அப்படியென்றால் அமலாக்குபவர்கள் என்று பொருள்.

நிகோலாய் பட்ருஷேவ் போன்ற சிலரே அதிபரின்மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் காலத்தில் இருந்த உளவுத்துறை மற்றும் உள்துறை பாதுகாப்பு நிறுவனமான கேஜிபியில் புதினுடன் பணியாற்றியது மட்டுமின்றி, 1999 முதல் 2008 வரை கேஜிபியின் வாரிசு அமைப்பான எஃப்.எஸ்.பியின் தலைவராகவும் நிகோலாய் பட்ருஷேவ் புதினுக்கு பிறகு உருவானார்.

படையெடுப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில், பட்ருஷேவ், அமெரிக்காவின் “உறுதியான இலக்கு” ரஷ்யாவை உடைப்பதுதான் என்ற கருத்தை முன்வைத்தார்.

அமெரிக்கா “உயிரி போருக்கு” தயாராவதாகவும், அமெரிக்காவும் பிரிட்டனும் ரஷ்யாவை தோற்கடிக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு மேற்கு நாடுகளை வழிநடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு யுக்ரேனில் உள்ள ககோஃப்கா அணை தகர்க்கப்பட்டபோது, அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ நட்பு நாடுகள் ஆதரவுடன் யுக்ரேன் அதைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவை கூர்ந்து கவனித்து வரும் வல்லுநர்கள், வேறு வழிகளில் வரும் தகவல்களைவிட பாதுகாப்பு சேவைகளிடமிருந்து பெறும் தகவல்களை அதிபர் அதிகம் நம்புவதாகக் கூறுகின்றனர். அத்தகைய நெருக்கிய வட்டத்தில் ஒருவராக அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் காணப்படுகிறார்.

லெனின்கிராட் காலத்து கேஜிபியில் இருந்து வந்துள்ள மற்றுமொரு பழைய செல்வாக்கு மிக்க நபர் இவர். நிகோலாய் பட் ருஷேவுக்கு பிறகு மத்திய பாதுகாப்பு சேவையின் தலைமைக்கு இவர் வந்தார்.

மத்திய பாதுகாப்பு சேவை மற்ற சட்ட அமலாக்க சேவைகளின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளது. அதற்கென சொந்தமாக சிறப்புப் படைகளும் உள்ளன.

அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் முக்கியமானவர். ஆனால், அவர் மற்றவர்களைப் போல் ஆலோசனை வழங்கவதற்காக நெருங்கிய வட்டத்தில் இல்லை என்று ஆண்ட்ரி சோல்டடோவ் நம்புகிறார்.

லெனின்கிராட் காலத்தில் இருந்து புதினுக்கு நெருக்கமாக இருந்து வரும் அந்த மூன்று பேரில், இவர் மூன்றாவது நபர். செர்கேய் நரிஷ்கின் தனது தொழில்முறை வாழ்க்கையின் பெரும்பகுதியில் அதிபருடன் இணைந்தே இருந்தார்.

இருப்பினும், போருக்கு முந்தைய நிலைமையைப் பற்றி அவரிடம் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது அவர் சரியாக விவரிக்காத நேரத்தில், அந்த நீண்டகால நட்பு அவர் மீது கோபம் கொள்வதில் இருந்து அதிபர் புதினை தடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி, “புதின் தனது நெருங்கிய வட்டத்திற்குள், (நரிஷ்கினை) ஒரு முட்டாளாகக் காட்டக்கூடிய வகையில் வேடிக்கை செய்வதை மிகவும் விரும்புவார்,” என்று ஆண்ட்ரே சோல்டடோவ் கூறினார்.

செர்கேய் நரிஷ்கின், 1990களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், 2004இல் புதினின் அலுவலகத்தில் என்று நீண்டகாலமாக அவரது நிழலாக இருந்தவர். அப்படி இருந்தவர், பிறகு இறுதியாக நாடாளுமன்றத்தில் சபாநாயகரானார். அவர் ரஷ்ய வரலாற்று சங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். இவர் அதிபரின் செயல்களுக்கான கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதில் முக்கியமானவர்.

கடந்த 19 ஆண்டுகளாக, ரஷ்யாவின் மூத்த ராஜதந்திரியாக இருந்துள்ளார். முடிவெடுப்பதில் அவருக்குப் பெரிய பங்கு இல்லை எனக் கருதப்பட்டாலும்கூட, ரஷ்யாவின் தரப்பு நியாயத்தை உலகுக்கு முன்வைப்பதில் இவர் பங்காற்றியுள்ளார்.

விளாதிமிர் புதின் தனது கடந்த கால நட்புகளைப் பெரிதும் நம்பியிருக்கிறார் என்பதற்கு, 73 வயதான செர்கேய் லாவ்ரோஃப் மிகப்பெரிய சான்று.

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அந்த முடிவைத் தற்காத்து அவர் பேசியபோது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பெரும்பகுதி வெளிநடப்பு செய்தது. ஆனால், அவர் அதைப் பொருட்படுத்திவே இல்லை.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

ஆரம்பத்திலிருந்தே புதினின் விசுவாசியாக இருந்தாலும், யுக்ரேன் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு எந்தவொரு பங்கும் இருப்பதாகக் கருதப்படவில்லை.

ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் பிற இடங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் திரட்டி, தனது நாட்டை ஒரு காலனித்துவ நாடாக ஊக்குவிப்பதே அவரது பணி.

யுக்ரேனை ஒரு “நாஜி ஆட்சி” என்று சித்தரிக்கும் முயற்சியில் அவர் ரஷ்யாவின் போருக்கான சொல்லாட்சியை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றார். யுக்ரேனின் அதிபர் யூதர் என்பதெல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை என்றுகூட அவர் வாதிட்டார். “நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால் ஹிட்லருக்கு கூட யூத ரத்தம் இருந்தது,” என்றுகூட அவர் வாதிட்டார்.

புதினுடைய பரிவாரங்களில் அரிதாக ஒரு பெண்ணின் முகம். இவர் மேல்சபையின் வாக்களிப்பை மேற்பார்வையிட்டவர். வெளிநாட்டில் ரஷ்ய படைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்து, படையெடுப்பிற்கு வழி வகுத்தவர்.

வாலென்டினா மாட்வியென்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்த மற்றொரு புதின் விசுவாசி. இவர் 2014இல் கிரைமியாவை இணைப்பதற்கு உதவினார்.

ஆனால், அவர் முதன்மையான முடிவுகளை எடுப்பவராகக் கருதப்படவில்லை.

அதிபரின் முன்னாள் மெய்க்காப்பாளரான இவர், இப்போது ரஷ்யாவின் தேசிய காவல்படையான ரோஸ்க்வார்டியாவை வழிநடத்துகிறார். இது 2016ஆம் ஆண்டு அதிபர் புதினால் உருவாக்கப்பட்ட ரோமானிய பேரரசை போன்ற பிரிட்டோரியன் காவலர்கள் பாணியில் அமைக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ராணுவம்.

அதை உருவாக்குவதற்கு முன்பாக, அதற்கான தனது சொந்த பாதுகாப்புக் காவலரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர் அந்தப் படையின் விசுவாசத்தை உறுதி செய்தார். மேலும் விக்ட்டோர் ஸோலோடாவ் அந்தப் படையின் எண்ணிக்கையை 400,000 ஆக உயர்த்தினார்.

அவருக்கு ராணுவப் பின்னணி இல்லையென்றாலும், யுக்ரேனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்த தேசிய காவல் படைக்குப் பரந்த அளவிலான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அதில் அவர் பெரும் இழப்பைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் ஏற்படுத்திய நெருக்கடி எப்படி முடியும் என்பதை முடிவு செய்வதில், ரஷ்யாவின் பாதுகாப்புப் படைகள் மற்றும் குறிப்பாக “தேசிய காவல் படை” முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரிட்டனின் உளவுத்துறை கூறியது.
புதின் வேறு யார் சொல்வதையெல்லாம் கேட்பார்?

பிரதமர் மிகைல் மிஷூஸ்டினுக்கு பொருளாதாரத்தை மீட்கும் நம்ப முடியாத அளவுக்குப் பெரிய பணி உள்ளது.

மாஸ்கோ மேயர் செர்கேய் சோபியானின், ரோஸ்நேஃப்ட் மாகாண எண்ணெய் நிறுவனத் தலைவர் இகோர் செச்சின் ஆகியோரும் அதிபருக்கு நெருக்கமானவர்கள் என்று அரசியல் ஆய்வாளர் யெவ்கெனி மின்சென்கோ கூறுகிறார்.

அதிபரின் குழந்தைப்பருவ நண்பர்களாக இருந்த கோடீஸ்வர சகோதரர்கள் போரிஸ் மற்றும் ஆர்கடி ரோட்டன்பெர்க் ஆகியோர் நீண்டகாலமாக நெருங்கிய நட்புவட்டத்தில் உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவர்களை ரஷ்யாவின் பணக்கார குடும்பமாக அறிவித்தது.

கூடுதல் செய்தி வழங்கியவர்கள்: ஓல்கா இவ்ஷினா, கேதரினா கிங்குலோவா, பிபிசி ரஷ்ய சேவை

You might also like

Leave A Reply

Your email address will not be published.