கூகுள் மெப் செயலியில் புதிய வசதி – இனி இணையவசதி தேவையில்லை !!
கூகுள் நிறுவனமானது பயனர்களின் தேவையை கருத்திற்கொண்டு பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று உலகளாவிய ரீதியில் மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் ஓர் அம்சமாக கூகுள் மெப் காணப்படுகின்றது.
அவ்வகையில், கூகுள் மெப் பயனர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளமையினால், வரைப்படத்தை சேமித்து வைத்து இணையவசதி இல்லாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தும் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், வீதியில் வாகன நெரிசலை கருத்திற்கொண்டு, வேறு பாதையை வாகனங்களுக்கு ஏற்ற விதமாக பரிந்துரை செய்யக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி தந்துள்ளது.
அத்துடன், கட்டணச்சாலை, தடை செய்யப்பட்ட சாலை மற்றும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்ட சாலை தொடர்பான விபரங்களை தருகின்றது.
அதேவேளை, வேகத்தை அளவிடும் கருவியாகவும் தொழிற்படுகின்றது.
அதாவது, குறித்த வீதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது எச்சரிக்கை சமிஞ்சை தெரிவிக்கும்.
இறுதியாக, வரைப்படத்தை மற்றோரு நபருக்கு பகிரும்போது புறப்பட்ட நேரம் வந்தடையும் நேரம் தொலைபேசியின் பட்டரி சதவீதம் (battery percentage) உட்பட்ட அனைத்தும் பகிரப்படும்.
இது பாதுகாப்பு நோக்கத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.