வங்கிச் சட்ட திருத்தத்துக்கு அங்கிகாரம்!!
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.
நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் ஆற்றல்மிக்க மற்றும் நெகிழ்ச்சியான வங்கித் துறையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, அடையாளம் காணப்பட்ட திருத்தங்கள் உட்பட தொடர்புடைய வங்கிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட வரைபை உருவாக்குவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.