உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்? !!
வரவு – செலவுத் திட்டத்துக்கு தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
700 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற உள்ளதாகவும் அதில் 200 மில்லியன் டொலர், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் முன்னதாக தெரிவித்திருந்தது.