இராணுவச் சட்டம் நடைமுறை! ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு !!
போர் முடிந்த பின்னர் 90 நாட்களுக்கு பிறகுதான் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் மே்கண்டவாறு கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
ஆனால் போர் நடந்துகொண்டிருப்பதால் இதற்கான தேர்தல் நடப்பது சந்தேகமாக இருந்தது வந்தது. தற்போது இதனை ஜெலென்ஸ்கி உறுதி செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “நாட்டில் இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது அதிபர் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என்று எங்கள் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
போர் முடிந்த பின்னர் 90 நாட்களுக்கு பிறகுதான் அதிபர் தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.