15 பெரிய தங்க ஜெல்களுடன் ஐவர் கைது!!
15 பெரிய தங்க ஜெல்களை தயாரித்து மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 05 வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று சுங்க ஊடகப் பேச்சாளரும், பிரதி சுங்கப் பணிப்பாளருமான .சுதத்த சில்வா தெரிவித்தார்.
இவர்கள் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 05 வர்த்தகர்களாவர்.
06/27 அன்று பிற்பகல் 01.55 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E.1176 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, கடத்தல்காரர்கள் தங்கத்தை ஜெல்லாக தயாரித்து சட்டவிரோதமாக கொண்டு செல்வதாகவும், ஜெல்லை தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் மட்டுமே உள்ளதாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 05 வர்த்தகர்களில் ஒவ்வொருவரும் இந்த ஜெல்லின் 03 காப்ஸ்யூல்களை தமது ஆசனவாயில் மறைத்து வைத்திருந்ததுடன் அவற்றின் மொத்த எடை 05 கிலோ 650 கிராம் ஆகும். அவை 107 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என மதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வர்த்தகர்கள் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் மேலதிக விசாரணைகளுக்காக தங்க ஜெல் கேப்சூல்கள் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.