யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் உயிர் காக்கும் பயிற்சி!! (PHOTOS)
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் உயிர் காக்கும் பயிற்சி நேற்று (27) காலை பத்து மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது “உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான பயிற்சியை வழங்குவதற்கு மாவட்ட செயலகம் சார்பில் நன்றிகளை தெரிவித்ததோடு, வழிபாட்டுக்காக ஆலயம் செல்கிறோம் அதேபோல் வீட்டிலும் சுவாமி அறையில் வழிபாடுகளை மேற்கொள்கிறோம். ஆனால் முழுமனதோடு வழிபாட்டில் ஈடுபடுவது அருகிவருகிறது. அத்தோடு வீட்டில் ஒருவொருக்கு ஒருவர் சந்தோஷமாக உரையாடுவதில்லை, அதேபோல் ஆரோக்கியத்தில் அக்கறைப்படுவதும் இல்லை இதனால் இத்தகைய பயிற்சிகள் உத்தியோகத்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்” என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தென்கைலாயம் திருமூர்த்திமலை தத்துவ தவ உயர்ஞானபீடம் குருமகான் அவர்களின் அருளாசிகளும், ஜீவரக்ஷா பயிற்சியும் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.