30000 பேரை உயிரோடு கடலில் வீசிய கொலைகார விமானம் – மீண்டும் ஆர்ஜென்டினாவில் !!
ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 30000 பேரை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை அந்நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றிருந்தது.
ஆர்ஜென்டினாவில் இராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, விமானத்தின் மூலம் உயிருடன் கடலில் வீசி கொல்லப்பட்ட கொடூரம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கொலைகார விமானம் என அழைக்கப்படும் இந்த விமானம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஆர்ஜென்டினாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் புயனோஸ் ஐரெஸில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த விமானம் வைக்கப்படவுள்ளது.