விரைவான திருப்பத்தை இலங்கை ஏற்படுத்தும் !!
உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பொர்கே பிரெண்டே, கடந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவான திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் தியான்ஜினில் உலக பொருளாதார மன்ற தலைவருக்கும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே நடந்த கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் மீட்சி நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தற்போது தியான்ஜினில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் குழுவுக்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.