கனடாவில் குடியேற விருப்பமா -முதலில் இதற்கு தயாராகுங்கள் !!
கனடாவில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவோர் பலருக்கு கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்க தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இது தெரியவந்துள்ளது. கனடாவில் குடியுரிமை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பரீட்சை ஒன்றுக்கு தோற்றி சித்தி அடைய வேண்டும்.
எனினும் இந்த பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பலருக்கு முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எழுமாறான அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 28 வீதமானவர்கள் மட்டுமே சரியான பதில்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரஜைகளின் உரிமைகள், பொறுப்புகள், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசாங்கம், சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி 20 கேள்விகள் கேட்கப்படும்.
இந்த 20 கேள்விகளைக் கொண்ட பரீட்சையில் 75 வீதத்திற்கு மேல் புள்ளிகள் பெறுவோருக்கே குடியுரிமை வழங்கப்படுகின்றது. எனினும் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களின் சராசரி புள்ளிகள் வெறும் 49 ஆக காணப்படுகின்றது.