ரஷ்ய இராணுவத்தில் சேர முண்டியடிக்கும் வெளிநாட்டு இளைஞர்கள் !!
நேபாளத்தில் வேலை இன்மை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் படித்துவிட்டு நேபாளத்திற்கு வரும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறந்தனர்.
அதன் விளைவாக ரஷ்ய இராணுவத்துக்கு நிறைய படை வீரர்கள் தேவைப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, வெளிநாட்டவரும் ரஷ்ய இராணுவத்தில் சேர வகை செய்யும் விதத்தில், குறிப்பிட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிக ஊதியம், ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய இராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
இந்த வாய்ப்பை பற்றி பிடித்துக்கொண்ட பெருமளவான நேபாள இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து வருவதாக தெரிய வருகிறது.