உக்ரைன் தலைநகருக்கு படையெடுக்கும் வெளிநாட்டு தலைவர்கள் !!
எவ்வித முன்னறிவுப்புமின்றி உக்ரைன் தலைநகருக்கு போலந்து அதிபர் Andrzej Duda,திடீரென விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, டுடா உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
உக்ரைனின் அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்கள் இதன்போது விவாதிப்பார்கள்.
உக்ரைன் களநிலைமை குறித்து பேச்சு
அத்துடன் உக்ரைன் களநிலைமை, மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீதான ரஷ்ய தாக்குதலின் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் பேசுவார்கள்.
வில்னியஸில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்தும் டுடாவும் ஜெலென்ஸ்கியும் கலந்துரையாடவுள்ளனர்.
லிதுவேனிய அதிபரும் விஜயம்
இதேவேளை முன்னதாக, லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நௌசேடா, கிய்வ் வந்தடைந்ததாக தகவல் வெளியானது.
உக்ரைனிய தலைநகருக்கான தனது பயணத்தைப் பற்றி கருத்து தெரிவித்த Nauseda, வில்னியஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தான் ஒரு முக்கிய செய்தியுடன் வருவதாக குறிப்பிட்டார்.அது “உக்ரைனின் இடம் நேட்டோவில் உள்ளது.” என்பதாகும்.