அமெரிக்கா: பல்கலைக்கழக விண்ணப்பத்தில் இனத்தை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை!!
அமெரிக்காவில் பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை குறிப்பிடும் நடைமுறை இருந்து வந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது. 1960-ல் இருந்து இந்த நடைமுறை அமலில் இருந்து வந்தது. தற்போது அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் திறமைகள் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இனத்தின் அடிப்படையில் அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதில் தடைக்கு ஆதரவு அளித்தனர். 3 நீதிபதில் தடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.