யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் செய்த மைத்திரி அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தினார்!! (PHOTOS)
யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்டார்.
யாழ் விஜயத்தின் ஓர் அங்கமாக யாழ் பொது நூலகத்துக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்தார். அதன் போது பொது நூலகத்தில் உள்ள டாக்டர் A.P.J அப்துல் கலாமின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கௌரவ. சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, முன்னாள் பிரதி நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாருமான பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் திரு. தஹாம் சிறிசேன அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.