ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்!!
ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்!
கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜெயந்தவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.