செவ்வாய் கிரகத்துக்கு சென்ற சிறிய ரக ஹெலிகாப்டரை தொடர்பு கொண்ட நாசா- விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!
செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆராய்ந்து வருகிறது. இதற்காக விண்கலன்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் இறங்கிய பகுதியில் ஒரு பெரிய மலை இருந்ததே தகவல் தொடர்பு தடையானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன் கூறும்போது இன்ஜினியுடி ஹெலிகாப்டர்தான் நீண்ட நாள் காலமாக தகவல் தொடர்பில் இல்லாமல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.