உக்ரைனுக்கு கைகொடுக்கும் உலக வங்கி !!
ரஷ்ய படையெடுப்பால் நிலைகுலைந்த உக்ரைன் பகுதிகளை சீரமைக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த செயல் திட்டத்திற்காக உலக வங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.
இதனை, அந்நாட்டு பிரதமர் டெனிஸ் ஸ்மைஹல் (Denys Shmyhal) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உக்ரைனை சீரமைக்க வழங்கப்படும் இந்த நிதியானது ஜப்பான் உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது.
அதாவது உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களுக்கான மானியங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு இது கடன் உதவியாக இருக்கும்.
ரஷ்யாவின் படையெடுப்பால் 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி கண்டதுடன், இந்த ஆண்டு பொருளாதார மீட்சியை அரசு எதிர்பார்க்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.