;
Athirady Tamil News

பிரான்ஸில் வெடித்த கலவரம் -காவல்துறையினரை துரத்தி தாக்கும் கலவரகாரர்கள் !!

0

பிரான்ஸில் வெடித்துள்ள கலவரத்தில் கலவரத்தில் ஈடுபடுவோர் காவல்துறை உத்தியோகத்ர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் நெயில் எம்(Nael m) என்ற 17வயது சிறுவன் நாண்டெர்ரே என்ற பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கலவரத்தை அடக்க முடியாமல் பிரான்ஸ் நாட்டு காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

நாடு முழுவதும் 40,000 காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தலைநகர் பாரிஸ் மட்டும் 5000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 3 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த பிரான்ஸ் காவல்துறை அதிகாரி ஒருவரை கலவரக்காரர் ஒருவர் துரத்தி துரத்தி வானவேடிக்கை பட்டாசுகளால் அவரது பின்புறம் தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள காட்சிகளில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கலவரக்காரரிடம் இருந்து தப்பித்து ஓடியும் விடாமல் அவரை கலவரக்காரர் தாக்குவது தெரியவந்துள்ளது.

இதேவேளை பிரான்ஸ் நாட்டின் மார்சேயில் கலவரக்காரர்களுடன் இணைந்து உளவுப் பணியில் ஈடுபட்டு இருந்த 2 இரகசிய காவல்துறை அதிகாரிகளில் ஒருவரை கலவரக்காரர்கள் பலமாக தாக்கி சுயநினைவை இழக்க செய்தனர். பலத்த காயங்களுடன் சாலையில் சுயநினைவின்றி மயக்கமடைந்து விழுந்த கிடந்த அவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலைக்கு கொண்டு வரப்பட்டார்.

கலவரக்காரர்கள் சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாலையில் சென்ற கார்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதேவேளை கலவரம் தொடர்பாக இதுவரை 1311 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.