ஜேர்மனியில் மிக நீளமாக அமைக்கப்பட்ட தொங்குபாலம்! !
ஜேர்மனியில் மிக நீளமாக அமைக்கப்பட்ட தொங்குபாலம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலமானது 100 மீற்றர் உயரத்தில், 600 மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்திற்கு 4.5 மில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட தொங்குபாலம்
ஸ்கைவாக் என்று அழைக்கப்படும் இந்த நடைபாதையைப் பயன்படுத்தி, சுற்றியுள்ள கிராமப்புறங்கள் அனைத்தையும் உயரத்திலிருந்து கண்டு களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரம்மாண்ட தொங்குபாலமானது உலகம் முழுவதிலுமுள்ள சாகச விரும்பிகளையும் சுறுல்லாப்பயணிகளையும் ஈர்க்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.