ஹந்தானையில் குளவிக்கொட்டு: 42 மாணவர்கள் பாதிப்பு!!
ஹந்தான மலையை ஏற வந்த ஜவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மீபே பல்கலைக்கழக மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 42 மாணவர்களில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (01) பிற்பகல் ஹந்தான மலை ஏறும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், மாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காயமடைந்தவர்களை சுவசர்ய அம்புலன்ஸ் வண்டிகளில் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 275 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் இந்த ஹன்தானா மலையேறுவதில் கலந்து கொண்டதுடன் காயமடைந்த மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களை அவர்கள் வந்த பஸ்கள் மூலம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.