ரஷ்யாவுக்கு பலத்த அடி..! இலக்குகளை துல்லியமாக தகர்த்த உக்ரைனிய படைகள் !!
ரஷ்யா 12 நாட்களின் பின் கிய்வ் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியதில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் எல்லைகளில் ரஷ்யாவால் நிறுத்தப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்கள் மற்றும் மூன்று கப்பல் ஏவுகணைகள் கியேவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
மீண்டும் படை திரட்டும் வாக்னர் படை தலைவன் – அச்சத்தில் உக்ரைன்: குவிக்கப்பட்ட படைகள்
இவ்வாறு அழிக்கப்பட்ட வான்கலங்களில் 8 ஈரானிய வான்கலங்கள் எனவும் 3 கலிபர் ரக கப்பல் ஏவுகணைகள் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கிய்வ் பிராந்தியத்தில் வான்கலங்கள் விழுந்ததால் மூன்று தனியார் வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிய்வ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் Ruslan Kravchenko கூறியுள்ளார்.
மூத்த உக்ரைனிய அதிகாரியின் கூற்றுப்படி, ரஷ்யா 12 நாள் இடைவெளிக்குப் பிறகு கிய்வ் மீது ஒரே இரவில் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியது.
ஆனாலும், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்து இலக்குகளையும் முன்கூட்டியே அழித்திருப்பதாக உக்ரைன் கூறுகிறது.