அதிக உயிரிழப்புக்கள் – உக்ரைன் மீட்புத் தாக்குதலின் எதிரொலி !!
ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளை மீட்டெடுப்பதற்கு அந்நாட்டு படைகள் தீவிரம் காட்டி வருகிறது.
அந்தவகையில், நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் உக்ரைன் படையினர் நகா்ந்து வருவதாக அமெரிக்க இராணுவ தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த் தாக்குதல் மிக நீண்ட காலம் நடக்கும் எனவும், இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படும் எனவும் அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, வொஷிங்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசியபோது,
“ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் நடவடிக்கைகள் எதிா்பாா்த்ததைவிட மிகவும் மந்தமாகவே உள்ளது. இது யுத்தத்தின் இயல்பு ஆகும்.
எதிா்த் தாக்குதல் மந்தமாக இருந்தாலும், அந்த நடவடிக்கையில் உக்ரைன் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
சவால்கள் நிறைந்த, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள நிலப் பகுதியை உக்ரைன் இராணுவம் மிகவும் கவனமாகக் கடந்து முன்னேறி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.