எஜமான் இறந்தது தெரியாமல் ரயில் நிலையத்தில் காத்திருந்த நாய் – நூறாண்டு தாண்டியும் நினைவுகூரும் மக்கள்!!
ஒரு திரைப்பட போஸ்டரில் சீன மொழியில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு டேக்லைன் அனைத்தையும் கூறுகிறது: “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் உங்களுக்காக காத்திருப்பேன்.”
அது ஹச்சிகோ என்ற வளர்ப்பு நாய் குறித்த உண்மைக் கதையைச் சொல்கிறது. அந்த நாய் தனது எஜமானுக்காக ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் அவரது மரணத்திற்குப் பின்னும் காத்துக்கொண்டே இருந்தது.
100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ‘க்ரீம் ஒயிட்’ நிற அகிடா இனு இன வளர்ப்பு நாய், ஏராளமான புத்தகங்களில் தொடங்கி திரைப்படங்கள்- அறிவியல் புனைகதை நகைச்சுவையான ஃபியூச்சுராமா வரை அனைத்திலும் நினைவுகூரப்பட்டுள்ளது.
கிரேஃப்ரியர்ஸ் பாபி போன்ற பிற அர்ப்பணிப்புள்ள வேட்டை நாய்களின் கதைகள் பரவலாக சொல்லப்பட்டு வந்தாலும், ஹச்சிகோ குறித்து உலகளாவிய தாக்கம் ஏற்படுத்திய கதை எதுவும் இல்லை.
தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை சந்தித்த பிரதமர் மோதி: ஆதிவாசி மக்களுக்காக பெள்ளி வைத்த கோரிக்கை
9 ஏப்ரல் 2023
“குருவிகளுக்காக நாங்கள் மின்விசிறிகூட போடுவதில்லை” – பல ஆயிரம் சிட்டுக்குருவிகள் வாழும் அதிசய வீடு
3 ஏப்ரல் 2023
அமேசான் காட்டில் குழந்தைகளை கண்டுபிடித்துவிட்டு தொலைந்த நாய் – தேடுதல் பணியில் ராணுவம்
13 ஜூன் 2023
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா நிலையத்திற்கு வெளியே இந்த நாயின் ஒரு வெண்கலச் சிலை உள்ளது, அங்கு அந்தச் சிலை முதலில் 1934-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஜப்பானிய பள்ளி மாணவர்களுக்கு இந்த விசுவாசமான நாய் ஹச்சிகோ குறித்த பாடம், விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உதாரணமாக கற்பிக்கப்படுகிறது.
ஹச்சிகோ தனது “சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விசுவாசத்துடன், சிறந்த ஜப்பானிய குடிமகனை” நினைவுபடுத்துவதாக ஹவாய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டின் யானோ கூறுகிறார். “விசுவாசமான, நம்பகமான, எஜமானருக்குக் கீழ்ப்படிதல், புரிதல் போன்ற பல்வேறு குணங்கள் ஜப்பானியர்களுக்கு இருக்கின்றன,” என்கிறார் அவர்.
ஒரு நன்றியுள்ள வளர்ப்பு நாயின் கதை
ஹச்சிகோ என்ற அகிடா இனு இனத்தைச் சேர்ந்த வளர்ப்பு நாய் நவம்பர் 1923 இல் ஜப்பான் நாட்டில் அந்த நாய் இனத்தின் பிறப்பிடமான அகிடா மாகாணத்தில் உள்ள ஒடேட் நகரில் பிறந்தது.
ஒரு பெரிய உருவத்தைக் கொண்டுள்ள ஜப்பானிய நாயான அகிடா இனு, அந்நாட்டின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான நாய் இனங்களில் ஒன்றாகும். 1931 இல் ஜப்பானிய அரசு இந்த இன நாயை தேசிய அடையாளமாக அறிவித்தது. ஒரு காலத்தில் இந்த இன நாய்கள், காட்டுப்பன்றி, எல்க் போன்ற விலங்குகளை வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டது.
“அகிடா இனு இன நாய்கள் பொதுவாக அமைதியானவையாகவும், நேர்மையானவையாகவும், புத்திசாலித்தனம் மற்றும் தைரியமானவையாகவும் இருக்கும். அதே வேளையில் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியும் தன்மையையும் பெற்றுள்ளன,” என்று ஹச்சிகோவைப் பற்றிய ஆங்கில மொழி குழந்தைகள் புத்தகத்தை எழுதிய எலீட்சு சகுரபா (Eietsu Sakuraba) கூறினார் . “அதே நேரம், இந்த இன நாய்கள் ஒரு முரட்டுத்தனமாக ஆளுமையையும் கொண்டுள்ளன. மேலும், எஜமானரைத் தவிர வேறு யாரிடமும் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கும்.”
ஹச்சிகோ பிறந்த ஆண்டில், புகழ்பெற்ற விவசாயப் பேராசிரியரும், நாய் பிரியர்களில் ஒருவருமான ஹிடெசாபுரோ யுனோ, ஒரு மாணவரிடம் தனக்கு ஒரு அகிடா நாய்க்குட்டியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
100 ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகூரப்படும் உலகிலேயே அதிக நன்றியுள்ள நாய்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
1932-ல் ஹச்சிகோ குறித்து செய்தித் தாள்களில் வெளியான கட்டுரைக்குப் பின் தேசிய அளவில் புகழ் கிடைத்தது
அதன் பின் 1924 ஜனவரி 15ம் தேதியன்று ஒரு நீண்ட ரயில் பயணத்துக்குப் பின் ஷிபுயா மாவட்டத்தில் உள்ள பேராசிரியர் யுனோவின் இல்லத்திற்கு இந்த ஹச்சிகோ வந்தது. ஆனால், அங்கு அது இறந்துவிட்டதாக முதலில் கருதப்பட்டது.
ஹச்சிகோவின் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியரும், பேராசிரியருமான மயூமி இடோவின் கூற்றின் படி, அடுத்த ஆறு மாதங்களில் பேராசிரியர் யுனோ, தனது மனைவி யாயேவுடன் இணைந்து மேற்கொண்ட கடினமான முயற்சிக்குப் பின் ஹச்சிகோ நாய் நல்ல உடல் நலம் பெற்றது.
பேராசிரியர் யுனோ அந்த நாய் குட்டிக்கு ஹச்சி (அல்லது ஜப்பானிய மொழியில் எட்டு) என்று பெயரிட்டார். கோ என்பது பேராசிரியர் யுனோவின் மாணவர்களால் வழங்கப்பட்ட ஒரு கௌரவமாகும்.
நீண்ட காலம் காத்திருந்த ஹச்சிகோ
பேராசிரியர் யுனோ ஒவ்வொரு வாரமும் பல முறை ரயிலில் வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. அவருடன் ஹச்சிகோ உட்பட அவரது மூன்று நாய்களும் ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வந்து மாலையில் அவர் திரும்புவதற்காக அங்கேயே காத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டன.
1925 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி, அப்போது 53 வயதான யுனோ பெருமூளை இரத்தப்போக்கினால் உயிரிழந்தார். ஹச்சிகோ அவருடன் 16 மாதங்கள் மட்டுமே அப்போது வாழ்ந்திருந்தது.
“அவரது உடலை வைத்துக்கொண்டு ஈமச்சடங்குகளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேற்கொண்டிருந்த போது, பேராசிரியர் யுனோவின் உடல் வாசனையை உணர்ந்து, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஹச்சிகோ சென்றது. பின்னர் அவரது உடலைச் சுற்றிலும் வளைந்து வளைந்து சுற்றிக்கொண்டிருந்தது,” என பேராசிரியர் இடோஹ் எழுதுகிறார்.
ஹச்சிகோ அடுத்த சில மாதங்களை ஷிபுயாவுக்கு வெளியே வெவ்வேறு குடும்பங்களுடன் கழித்தது. ஆனால் இறுதியில், 1925ம் ஆண்டு கோடை காலத்தில், அது யுனோவின் தோட்டக்காரர் கோபயாஷி கிகுசாபுரோவிடம் சென்று சேர்ந்தது.
தனது மறைந்த எஜமானர் வசித்த பகுதிக்குத் திரும்பிய ஹச்சிகோ, ரயில் நிலையத்துக்குச் சென்றுவரும் தனது பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளத் தொடங்கியது.
“மாலையில், ஹச்சிகோ ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்துக்கு அருகே நின்று யாரையோ தேடியதைப் போல் ஒவ்வொரு பயணியையும் பார்த்துக்கொண்டிருந்தது,” என்று பேராசிரியர் இட்டோ எழுதுகிறார். ரயில் நிலைய ஊழியர்கள் தொடக்கத்தில் அதை ஒரு தொல்லையாகவே பார்த்தனர். யாகித்தோரி வியாபாரிகள் அதன் மீது தண்ணீர் ஊற்றி விரட்டத் தொடங்கினர் என்பது மட்டுமல்லாமல் அங்கிருந்த சிறுவர்கள் அதை அடித்துக் கொடுமைப்படுத்தினர்.
இருப்பினும், ஜப்பானிய நாளிதழான டோக்கியோ அசாஹி ஷிம்பன், 1932 அக்டோபரில் ஹச்சிகோவைப் பற்றி எழுதிய பின்னர் அந்த நன்றியுள்ள நாய் நாடு தழுவிய புகழ் பெற்றது. ஹச்சிகோவைப் பற்றிப் பலர் கவிதைகளையும், பாடல்களையும் எழுதினர்.
அதன் பின்னர் ஹச்சிகோவிற்கு ஒவ்வொரு நாளும் நன்கொடையாக ஏராளமான பொதுமக்கள் ரயில் நிலையத்துக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைக்கத் தொடங்கினர். வெகுதொலைவில் இருந்தும் ஹச்சிகோவைக் காண பார்வையாளர்கள் வந்து சென்றனர். 1934ம் ஆண்டு ஹச்சிகோவுக்கு சிலை அமைக்க நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு 3,000 பேர் வந்து நிதி அளித்தாக கூறப்படுகிறது.
1935ம் ஆண்டு மார்ச் 8 அன்று ஹச்சிகோ உயிரிழந்தது. அதன் இறப்பு பல செய்தித்தாள்களின் முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருந்தது. அதன் இறுதிச் சடங்கில், புத்த துறவிகள் பங்கேற்று ஹச்சிகோவுக்காகப் பிரார்த்தனை செய்தனர். மேலும், முக்கிய பிரமுகர்கள் புகழஞ்சலிகளை வாசித்தனர். அதற்கடுத்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஹச்சிகோவின் சிலையை பார்வையிட்டுச் சென்றனர்.
ஹச்சியோ சிலை வைக்கப்பட்டுள்ள இடம் ஒரு புகழ்பெற்ற இடமாக மாறிய பின் அரசியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தில் தான் போராட்டம் நடத்துகின்றனர்
போருக்குப் பிந்தைய ஜப்பானில் வறுமை அதிகரித்த போது, ஹச்சிகோவின் புதிய சிலைக்கான நிதி திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு பெரும் தொகையாக எட்டு லட்சம் யென்கள் திரட்ட முடிந்தது. தற்போதைய மதிப்பில் அது 400 கோடி யென் (£22m; $28m) மதிப்புடையது.
“மறுபுறம், டாக்டர் யுனோ திரும்பி வரமாட்டார் என்று ஹச்சிகோவுக்குத் தெரியும் என்றே நான் கருதுகிறேன். ஆனாலும் அது தொடர்ந்து காத்திருந்தது. ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கையின் மதிப்பை ஹச்சிகோ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது,” என்று 1982 இல் ஒரு செய்தித்தாள் கட்டுரையில் ஒகமோட்டோ தகேஷி எழுதினார். உயர்நிலைப் பள்ளி மாணவராக, அவர் தினமும் ஹச்சிகோவை ரயில் நிலையத்தில் பார்த்துவந்தார்.
‘ஒவ்வொரு ஆண்டும் ஹச்சிகோவின் நினைவு தினம்’
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி, ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வெளியே ஹச்சிகோவின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் சிலைக்கு பொதுமக்கள் ஆசைஆசையாக பல ஆடைகளை அணிவித்து மகிழ்ச்சியடைகின்றனர். அண்மையில், அதன் சிலைக்கு ஒரு முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்ததைக் கூட காணமுடிந்தது.
அதன் நினைவுப் படம் டோக்கியோவில் உள்ள தேசிய இயற்கை மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் சில எச்சங்கள் அயோமா கல்லறையில், பேராசிரியர் யுனோ மற்றும் யாயோ உடல்களுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. யுனோவின் சொந்த ஊரான ஹிசாய், டோக்கியோ பல்கலைக்கழகம், ஒடேட் மற்றும் ரோட் தீவிலும் அதன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கேள்விக்கு ஆம் என பேராசிரியர் யானோ பதில் அளிக்கிறார், ஏனெனில் “ஹச்சிகோவின் அன்பும், பாசமும்” எந்தவொரு குறிப்பிட்ட காலகட்டத்திற்காகவும் வரையறுக்கப்படவில்லை – மாறாக அது நிலையானது.
சகுரபாவும் இதே போன்ற கருத்தைத் தான் தெரிவிக்கிறார். “இப்போதிலிருந்து 100 ஆண்டுகள் கூட, இந்த அப்பழுக்கற்ற, அர்ப்பணிப்புள்ள அன்பு, மாறாமல் நிலைத்திருக்கும். அதுமட்டுமல்ல, ஹச்சிகோவின் கதை என்றென்றும் வாழும்.”