;
Athirady Tamil News

பிரதமர் மோடி, அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க ஏற்பாடு- தெலுங்கு தேசம் கட்சி அதிர்ச்சி!!

0

ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 5-ந் தேதி சந்திப்பு நடைபெறலாம் என அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் திருப்பதி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் ஜெகன்மோகன் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினர். அவர்கள் வருகையின்போது ஜெகன்மோகன் கட்சி தலைவர்கள் சந்தித்து பேச முயன்றனர். அதனையும் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் புறக்கணித்தனர். இதனால் பா.ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு பா.ஜனதா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில்:- நாங்கள் ஒருபோதும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. மத்திய அரசுடன் நல்ல உறவை பேணுவோம். ஒரு கட்சியாக நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். மக்கள் பணிக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு தொடரும் என்றார். பிரதமர் மோடி, அமித்ஷா உடன் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்புக்கு பிறகு கூட்டணியில் மாற்றம் எதுவும் ஏற்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.