நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா!! (PHOTOS)
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மனின் , பிள்ளையார் மற்றும் முருகன் சகிதம் கங்காதரணியில் தீர்த்தமாடினார்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ ஆலயத்தில் இருந்து தீர்த்தக்கரைக்கு எழுந்தருளினார்.